|
பாடல் எண் :1166 | அரிய நான்மறை யோதிய நாவரோ பெரிய வான்புரஞ் சுட்ட சுவண்டரோ விரிகொள் கோவண ஆடைவிருத்தரோ பெரிய வான்கத வம்பிரி விக்கவே. |
| 4 | பொ-ரை: அருமை உடைய நான்மறை அருளிய நாவுடையவரே! பெரிய புரம் எரியுண்ணுமாறு சுட்ட உயர்ந்த தேவரே! விரிந்த கோவண ஆடை கொண்ட மிகப்பழையவரே! பெரிய இக்கதவினைப் பிரித்தருள்வீராக. கு-ரை: அரிய - பொருள் உணர்தற்கு அரிய (நான்மறை). விரிகொள் - விரித்தலைக்கொண்ட. விருத்தர் - பழையோன். |
|