|
| பாடல் எண் :1172 | விண்ணு ளார்விரும் பியெதிர் கொள்ளவே மண்ணு ளார்வணங் கும்மறைக் காடரோ கண்ணி னாலுமைக் காணக் கதவினைத் திண்ண மாகத் திறந்தருள் செய்ம்மினே. |
| | 10 | பொ-ரை: விண்ணுலகத்தவர் விரும்பி எதிர்கொண்டு இன்புறுமாறு மண்ணுலகத்தவர் சென்று வணங்கியெழும் மறைக்காட்டுறையும் பெருமானே! கண்ணினால் உமைக் காணுவதற்காகக் கதவினைத் திண்ணமாகத் திறந்து அருள் செய்வீராக. கு-ரை: தேவர்கள் முன்னர்வந்து வழிபாடு முடித்துள்ளாராகலின், பின் வழிபடவரும் மண்ணவர்களை எதிர் கொள்ளுகின்றார்கள் என்க. இவ்வியல்பினையுடையது திருமறைக்காடு என்க. |
|