|
பாடல் எண் :1183 | கடுக்கண் டன்கயி லாய மலைதனை எடுக்க லுற்ற இராவணன் ஈடற விடுக்க ணின்றி வெகுண்டவன் மீயச்சூர் இடுக்கண் தீர்க்கநின் றாரிளங் கோயிலே. |
| 10 | பொ-ரை: விடமுண்டகண்டனும், கயிலாயமலையினை எடுக்கலுற்ற இராவணன் ஈடற விடுதற்கேற்ற இடமில்லையாம்படி வெகுண்டவன் மீயச்சூரில் இளங்கோயிலின்கண் இடுக்கண் தீர்க்க நின்ற இறைவனேயாவன். கு-ரை: கடு - விடம். ஈடு - வலிமை. விடுக்கண் இன்றி - விடுபடுதற்கு இடன் இன்றாம்படி. வெகுண்டவன் - அருள் செய்யும் நோக்கோடு சினந்தவன். இடுக்கண் - துன்பம். |
|