|
பாடல் எண் :1187 | மாடத் தாடு மனத்துடன் வைத்தவர் கோடத் தார்குருக் கேத்திரத் தார்பலர் பாடத் தார்பழிப் பார்பழிப் பல்லதோர் வேடத் தார்தொழும் வீழி மிழலையே. |
| 4 | பொ-ரை: முதல்வனை மாடத்தும் (விமானத்தும்), ஆடும் மனத்தும் உடன் வைத்தவராகிய திருமாலும், வேத கோஷம் செய்யும் பிரமனும், குருக்ஷேத்திரத்தார் பலரும் (பாண்டவர்) , வேதத்தின் மூல பாடம் பேணும் அந்தணர்களும், பழிப்பார் கூறும் பழிப்பு அல்லதாகிய திருவேடம் பூண்ட அடியார்களும், தொழும் (பதி) திருவீழிமிழலையே. கு-ரை: மாடத்தும் ஆடும் மனத்தும் (முதல்வனை) உடன் வைத்தவர் - விண்ணிழி விமானமாகிய புறத்தும் நிலையாது திரியும் மனத்தும் (அகத்தும்) முதல்வனை வழிபட்ட திருமால். கோடத்தார் - கோஷத்தார். (வேத கோஷம் செய்யும் பிரமன்) பாடத்தார் - மூல பாடம் பேணும் அந்தணர். தொழும்பதி என ஒரு சொல் வருவிக்க. திருமால், பிரமன், பாண்டவர் எனத் தனித்தவர்களாகக் கொள்ளாது. தொகையினராகக் கோடலும் ஒன்று. மாடம் - மாடம் போன்ற விமானம். |
|