|
பாடல் எண் :1191 | எரியி னாரிறை யாரிடு காட்டிடை நரியி னார்பரி யாமகிழ் கின்றதோர் பெரிய னார்தம் பிறப்பொடு சாதலை விரிய னார்தொழும் வீழி மிழலையே. |
| 8 | பொ-ரை: எரியைக்கையால் ஏந்தியவரும், யாங்கணும் தங்கி நிற்போரும், நரிகளைப் பரிகளாகக் கொண்டு இடுகாட்டிடை ஆடுதலை மகிழ்கின்ற பெரியரும் (மகாதேவனும்) தங்கும் இடம் பிறப்போடு கூடிய இறப்பை அகல நினைப்பார் தொழும் தலமாகிய வீழிமிழலை ஆகும். கு-ரை: எரியினார் - தமது அங்கைசேர் எரியர்; தங்குபவர்; இறை யார் - எங்கும் தலைமையானவர். முறைசெய்து காப்பாற்றுவோன் எனினும் அமையும். நரியினார் பரியா இடுகாட்டிடை மகிழ்கின்றதோர் பெரியனார் எனக் கூட்டுக. நரியினார் - இழிவு சிறப்பு; நரிகளைப் பரிகளாக்கியவரும், இடுகாட்டில் ஆடுதலை மகிழ்கின்ற பெரியரும் ஆகியவர். பிறப்பொடு சாதலை வெரீஇயினார் என்பதும் பாடமாகலாம் அல்லது வெரீஇயினார் என்பது விரியினார் என மருவிற்று என்க. பிறப் பிறப்புக்களை அஞ்சினார் என்பது பொருள். |
|