|
பாடல் எண் :1193 | பாலை யாழொடு செவ்வழிப் பண்கொள மாலை வானவர் வந்து வழிபடும் ஆலை யாரழ லந்தண ராகுதி வேலை யார்தொழும் வீழி மிழலையே. |
| 10 | பொ-ரை: மாலைக்காலத்து வானவர் வந்து பாலைப்பண்ணும் செவ்வழிப் பண்ணும் கலந்த பாடல்களைப்பாடி வழிபடும் இடம் அந்த மாலைக்காலத்தே அந்தணர் நிறைந்த நெருப்பை வளர்த்து ஆகுதி செய்யும் தொழிலராய் வழிபடும் திருவீழிமிழலையே ஆம். மாலைக்காலத்தே சுரர்பாடப்பூசுரர் வேட்டு வழிபடும் இடம் என்பது கருத்து. கு-ரை: ஆகுதி வேலையர் - அவிசு சொரியும் செயலராய். வேலை - செயல், தொழில். |
|