|
பாடல் எண் :1196 | கண்ணி னாற்களி கூரக்கை யால்தொழு தெண்ணு மாறறி யாதிளைப் பேன்றனை விண்ணு ளார்தொழும் வீழி மிழலையுள் அண்ண லேயடி யேனைக் குறிக்கொளே. |
| 2 | பொ-ரை: இன்பம் மிகும்படி கண்ணினாற்கண்டு, கையால் தொழுது, எண்ணுமாற்றியாது இளைக்கும் எளியேனை, தேவர்கள் தொழும் வீழிமிழலையுள் அண்ணலே, குறிக்கொண்டு காத்தருள்வாயாக. கு-ரை: களிகூரும்படி கண்டு, தொழுது, எண்ணுமாறு என்க. கையால் தொழுது என்று பின்வருதலின், கண்ணினால் கண்டு என்பது முன்தானே போதரும். களிகூர - களிப்புமிக. கையால்தொழுது - கைகளால் வணங்கி. எண்ணும் ஆறு அறியாது - உன்னை நினைக்கும் நெறியறியாது. இளைப்பேன்தனை - வருந்துவேனாகிய என்னை. அண்ணல் - தலைமையானவனே. |
|