|
பாடல் எண் :1218 | வண்ட ணைந்தன வன்னியும் மத்தமும் கொண்ட ணிந்த சடைமுடிக் கூத்தனை எண்டி சைக்கு மிடைமரு தாவென விண்டு போயறும் மேலை வினைகளே. |
| 3 | பொ-ரை: வண்டணைந்த வன்னியும், மத்தமுமாகிய மலர்களைக் கொண்டு அணைந்த சடைமுடிக் கூத்தப் பிரானை, எண்டிசைக்கும் தலைவனாகிய இடைமருதா என்றுகூற, நம் பழைய வினைகள் நம்மைவிட்டுப் பிரிந்து கெட்டு நீங்கும். கு-ரை: மற்றொரு பாடல் (தி.5.ப.14.பா.5) இப்பாடலை ஒத்திருப்பதை ஓர்க. மத்தம் - ஊமத்தம்பூ. மத்தம் கூத்தனார் என்ற சொல் வேறுபாடுகள் மட்டுமே கொண்டு இப்பாடல் இரண்டு பதிகங்களில் வருகின்றது. |
|