பாடல் எண் :1232
மதத்த வாளரக் கன்மணிப் புட்பகம்
சிதைக்க வேதிரு மாமலைக் கீழ்ப்புக்குப்
பதைத்தங் கார்த்தெடுத் தான்பத்து நீண்முடி
பிதக்க வூன்றிய பேரெயி லாளரே.

11
பொ-ரை: பேரெயில் தலத்து இறைவர் செருக்குடைய வாள் அரக்கன் இவர்ந்து வந்த புட்பக விமானத்தைத் திருமலை தடுக்கஉடனே பதைத்து அத்திருமலையின் கீழ்ப்புகுந்து அங்கு ஆர்த்து எடுத்தபோது, அவன் முடிபத்தும் சிதையும் படியாக ஊன்றியவர்.கு-ரை: மதத்த - செருக்கு உள்ள. சிதைக்கவே - தடைசெய்தமையின் (இவர்) ஊன்றிய பேரெயிலாளர் (ஊன்றியவர்) என முடிக்க. நீள்முடி பிதக்க - நீண்டமுடி நசுங்கும்படி.