|
பாடல் எண் :1247 | பண்ணின் இன்மொழி கேட்கும் பரமனை வண்ண நன்மல ரான்பல தேவரும் கண்ண னும்மறி யான்கடம் பந்துறை நண்ண நம்வினை யாயின நாசமே. |
| 4 | பொ-ரை: பண்ணின் இன்மொழி கேட்கும் விருப்புடைய பரமனும், நான்முகனும், தேவர்களும், திருமாலும், அறியப்படாதவனுமாகிய பெருமான் வீற்றிருக்கும் கடம்பந்துறையை நண்ணினால், நம்வினைகளாயவை நாசமாம். கு-ரை: பண்ணின் இன்மொழி - இரு காதுகளிலும் இருகுழைவடிவாக அசுவரதரன், கம்பளதரன் என்பார். பாடல் பண்ணிசை மொழிகளை அல்லது அடியார்கள் பாடும் பண்ணிசைப் பாடல்களைக் கேட்கும் பரமன் என்க. வண்ணநன்மலரான் - அழகிய நல்ல தாமரையில் உள்ள நான்முகன்; பல தேவரும் கண்ணனும் அறியான் - (நான்முகனும்) தேவர்கள் பலரும் திருமாலும் அறியாதவன். நண்ண - அடைய. வினையாயின - வினைகள். |
|