|
பாடல் எண் :1263 | பணங்கொள் பாற்கடல் பாம்பணை யானொடும் மணங்க மழ்மலர்த் தாமரை யானவன் பிணங்கும் பேராழ லெம்பெரு மாற்கிடம் கணங்கள் போற்றிசைக் குங்கரக் கோயிலே. |
| 10 | பொ-ரை: பாற்கடலில் கிடக்கும் படம்கொண்ட பாம்பு அணையானாகிய திருமாலும் மணம் கமழ் மலர்த்தாமரையானாகியபிரமனும் தம்மில் மாறுபட்ட போது பேரழலாய் நிமிர்ந்த எம்பெருமானுக்கு இடம், கணங்கள் போற்றிசைக்கும் கரக்கோயிலாகும். கு-ரை: பணங்கொள்பாம்பு எனக் கூட்டுக. பணம் கொள் - படத்தைக்கொண்ட. பாற்கடல் - திருப்பாற்கடலில். அணையான் - படுக்கையாகக்கொண்டு அறிதுயில் செய்பவன். மலர்த்தாமரையான் - வெண்தாமரை மலரில் எழுந்தருளியிருப்பவனாகிய பிரமன். பிணங்கும் - 'யானே பிரமம்' எனச் சொல்லித் தம்முள் மாறுபடுதற்குக் காரணமாக. பேரழல் - பெரிய சோதிவடிவாய்த் தோன்றியவனாகிய; இச் சோதிப்பிழம்பே மஹாலிங்கம் எனப்படும். |
|