|
பாடல் எண் :1264 | வரைக்கண் நாலஞ்சு தோளுடை யான்தலை அரைக்க வூன்றி யருள்செய்த ஈசனார் திரைக்குந் தண்புனல் சூழ்கரக் கோயிலை உரைக்கு முள்ளத் தவர்வினை யோயுமே. |
| 11 | பொ-ரை: திருக்கயிலாயத் திருமலைக்கண் இருபது தோளுடைய இராவணன் தலைகள் அரைபடும்படி ஊன்றிப் பின்னர் அருள்புரிந்த ஈசனார் வீற்றிருக்கும், அலைவீசும் குளிர் புனல் சூழ்கரக்கோயிலைக் கூறும் உள்ளத்தவர் வினைகள் ஓயும். கு-ரை: வரைக்கண் - திருக்கயிலைத் திருமலையின்கண். நாலைந்து தோளுடையான் - இருபது தோள்களை உடைய இராவணன். அரைக்க - நெரிபட. திரைக்கும் - அலைவீசும். ஓயும் - பலன்தாராது மெலியும். |
|