பாடல் எண் :1270
மல்லை ஞாலத்து வாழு முயிர்க்கெலாம்
எல்லை யான பிரானா ரிருப்பிடம்
கொல்லை முல்லை கொழுந்தகை மல்லிகை
நல்ல சேர்கடம் பூர்க்கரக் கோயிலே.

6
பொ-ரை: வளம் பொருந்திய உலகத்து வாழும் உயிர்கட்கெல்லாம் எல்லையாகிய தலைவர் இருப்பிடம், முல்லை, கொழுத்த மல்லிகை ஆகிய நல்ல மலர்கள் சேர்ந்த கடம்பூர்க் கரக்கோயிலாகும்.
கு-ரை: மல்லைஞாலத்து - வளம்பொருந்திய இவ்வுலகத்து. எல்லையான பிரானார் - ஆதி அந்தம் என்னும் இரு கோடிகளாகவும், சென்றடையும் பரமார்த்தமாகவும் உள்ளவன். கொல்லை - காடு. கொழுந்தகை - நிலவளத்தால் கொழுத்த தன்மையை உடைய. நல்லசேர் - நல்லனவாய எல்லாம் சேர்ந்த.