பாடல் எண் :1284
சனியும் வெள்ளியுந் திங்களும் ஞாயிறும்
முனிவ னாய்முடி பத்துடை யான்றனைக்
கனிய வூன்றிய காரண மென்கொலோ
இனிய னாய்நின்ற வின்னம்ப ரீசனே.

10
பொ-ரை: நமக்கு இனியவனாய் நின்ற இன்னம்பர் ஈசனே! சனியும், ஞாயிறும், வெள்ளியும், திங்களுமாகிய கோள்களைமுனிபவனாகிய பத்துத்தலையுடைய இராவணனைக் கனியுமாறு திருவிரலால் ஊன்றிய இன்னாமைக் காரணம் என்னையோ?
கு-ரை: சனி, வெள்ளி, திங்கள், ஞாயிறு இவற்றை முனிபவனாய் என்க. இராவணன் நவக்கிரகங்களை அடிமையாக்கி ஆண்டவன் என்பதைக் கருதியது. முனிபவன் - வெறுப்பவன். கனிய ஊன்றியகாரணம் - மனம் பண்படத் திருவிரலால் ஊன்றிய காரணம். என்கொலோ - யாதோ? தேவர்களை அடிமையாக்கிக் கொடுமையே செய்த இராவணனைத் திருந்தும்படி ஊன்றிய காரணம் என்னவோ என வினவினார்.