|
பாடல் எண் :1293 | சிரமஞ் செய்து சிவனுக்குப் பத்தராய்ப் பரம னைப்பல நாளும் பயிற்றுமின் பிரமன் மாலொடு மற்றொழிந் தார்க்கெலாம் குரவ னாருறை யுங்குட மூக்கிலே. |
| 9 | பொ-ரை: பிரமன், திருமால் முதலிய தேவர்க்கெல்லாம் பரம ஞானாசாரியனாக விளங்கும் பரமன் உறையும் குடமூக்கில், பல நாளும் பயின்று சிவனுக்குப் பக்தர்களாக முயற்சி செய்து வாழ்வீர்களாக.கு-ரை: சிரமம் - வருந்திச் செய்யும் இயமம் நியமம் முதலியமுயற்சி. பத்தர் - அன்புடையவராய். பயிற்றுமின் - சொல்லிப் பழகுங்கள். மற்றொழிந்தார்க்கெலாம் - ஏனைய தேவர் முதலானோர்க்கும். குரவன் - தலைவன் அல்லது ஆசிரியன். |
|