|
பாடல் எண் :1295 | கொடுங்கண் வெண்தலை கொண்டு குவைிலைப் படுங்க ணொன்றில ராய்ப்பலி தேர்ந்துண்பர் நெடுங்கண் மங்கைய ராட்டயர் நின்றியூர்க் கடுங்கைக் கூற்றுதைத் திட்ட கருத்தரே. |
| 1 | பொ-ரை: நீண்ட கண்களை உடைய மங்கையர்கள் ஆடல் புரிகின்ற நின்றியூரில், கடிய கையுடைய கூற்றுவனை உதைத்திட்டவரும் அன்பர்களின் கருத்தில் உறைபவரும் ஆகிய இறைவர், கொடிய கண்களை உடைய. வெள்ளிய கபாலம் கொண்டு, குறைகொண்டு விலைகூவுதற்குப்படும் பொருள் ஏதுமிலராகிய இரவலராய்ப் பலி தேர்ந்து உண்ணும் இயல்புடையவர் ஆவர். கு-ரை: கொடுங்கண் - தோண்டப்பட்ட கண்களை உடைய குறைவிலைப்படுங்கண் ஒன்று இலராய் - குறைந்த விலைக்கு விற்றுக்கொள்வதோர் இடமுமில்லாதவராய் "விற்றூண் ஒன்றில்லாத நல்கூர்ந்தான்காண்" (தி.6.ப.8.பா.1.) பலி தேர்ந்து - இரந்து. நெடுங்கண் - காதளவு நீண்ட கண்கள். ஆட்டயர் - நாட்டியம் அயர்கின்ற. கடுங்கை - உலகப்பற்றினின்று உயிர்களைப் பிரித்தல் வலிதாதலின் வலிதாகிய கை என்றார். கருத்தர் - மூலகாரணர். |
|