|
பாடல் எண் :1297 | புற்றி னாரர வம்புலித் தோல்மிசைச் சுற்றி னார்சுண்ணப் போர்வைகொண் டார்சுடர் நெற்றிக் கண்ணுடை யாரமர் நின்றியூர் பற்றி னாரைப்பற் றாவினை பாவமே. |
| 3 | பொ-ரை: புற்றினைப் பொருந்திய அரவினைப் புலித்தோலின்மேல் சுற்றியவரும், திருநீற்றைப் பூசிய மேனியினரும், சுடர் நெற்றிக்கண்ணை உடையாருமாகிய இறைவர் அமர்கின்ற நின்றியூரைப் பற்றிய அன்பர்களை, வினைகளும் அவற்றான் வரும் பாபங்களும் பற்றமாட்டா.கு-ரை: புற்றினார் அரவம் - புற்றில் உறைகின்றதாகிய பாம்பு. புலித்தோல்மிசை - புலித்தோலின்மேல். சுற்றினார் - வரிந்து கட்டினார். சுண்ணப்போர்வை - உடலைப் போர்த்தது போன்ற திருநீற்றுப் பூச்சு. சுடர் - நெருப்பாகிய. அமர் - எழுந்தருளியுள்ள. பற்றினாரை - வணங்குதலை நிலையாகக் கொண்டவர்களை. பற்றா - பற்றமாட்டா. வினை பாவம் - தீவினையும் பாவமும். வினை -தூலவினை; ஆகாமியம். பாவம் - சூக்குமவினை; சஞ்சிதம். |
|