பாடல் எண் :1299
சுனையுள் நீலஞ் சுளியும் நெடுங்கணாள்
இணைய னென்றென்று மேசுவ தென்கொலோ
நினையுந் தண்வயல் சூழ்திரு நின்றியூர்ப்
பனையின் ஈருரி போர்த்த பரமரே.

5
பொ-ரை: நினைத்தற்குரிய குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த திருநின்றியூரில். பனைபோன்ற துதிக்கையை உடைய யானையின் உரியினைப் போர்த்த பரமரே! சுனையிற் பூத்த நீல மலரும் தோற்றுச் சுளித்தற் கேதுவாய் நெடுங்கண்களை உடையளாகிய இவள்! இத்தன்மை உடையவன், என்று என்றும் ஏசுவதன் காரணம் என்னை?
கு-ரை: சுனையுள் நீலம் - சுனையில் பூத்த நீலப்பூவை (வெகுளும்). நெடுங்கணாள் - நீண்ட கண்ணை உடையவள். இனையன் என்று - காதலித்தாரைக் கை விட்டவன என்று. என்றும் - நாடோறும். ஏசுவது - பழித்துரைப்பது. என் கொலோ - யாது காரணத்தாலோ. நினையும் - எல்லோராலும் விரும்பி நினைக்கப்படும். பனையின் ஈருரி - பனை போன்ற கையை உடையதாகிய யானையை உரித்த தோலை.