|
பாடல் எண் :1316 | மடந்தை பாகம் மகிழ்ந்த மணாளனார் தொடர்ந்த வல்வினை போக்கிடுஞ் சோதியார் கடந்த காலனைக் கால்கொடு பாய்ந்தவர் படர்ந்த நாகத்தர் பாசூ ரடிகளே. |
| 2 | பொ-ரை: படர்ந்தெழும் நாகத்தைப் பூண்ட திர்ப்பாசூர்த் தலத்து இறைவர். உமாதேவியை ஒரு பாகத்து மகிழ்ந்த மணவாளர்; உயிர்களைப் பிறவிதோறும் தொடர்ந்து வரும் வல்லமை உடைய வினைகளாகிய இருளைப் போக்கிடும் ஒளி வடிவானவர்; எல்லை கடந்த இயமனைக் கால்கொண்டு பாய்ந்து உதைத்தவர். கு-ரை; மடந்தை - பார்வதி. பாகம் மகிழ்ந்த - இடப்பாகத்தே கொண்டு மகிழ்வெய்திய தொடர்ந்த - நம்மைத் தொடர்ந்துவந்த. வல்வினை - தம் பயனை ஊட்டாது அழியாத வலிய வினைகள். கடந்த - எல்லைமீறித் தம்மை வழிபடுவரிடம் வந்த. கால்கொடு பாய்ந்தவர் - திருவடியால் சினந்தவர். படர்ந்த - சுற்றிய. |
|