|
பாடல் எண் :1324 | மாலி னோடு மறையவன் தானுமாய் மேலுங் கீழு மளப்பரி தாயவர் ஆலின் நீழ லறம் பகர்ந் தார்மிகப் பால்வெண் நீற்றினர் பாசூ ரடிகளே. |
| 10 | பொ-ரை: பால்போன்ற வெண்ணீற்றையணிந்தவராகிய திருப்பாசூர்த் தலத்திறைவர் மாலினோடு பிரமனும் மேலும் கீழும் அளந்தும் காண்டற்கரியவர்; ஆலின்நீழல் இருந்து அறம் பகர்ந்த ஞானவடிவினர். கு-ரை: மறையவன் - வேதங்களை ஓதுபவனாகிய பிரமன். ஆலின் நீழல் - கல்லாலின் நீழலிலே அமர்ந்து. அறம்பகர்ந்தார் - ஞானநெறியை உலகிற்கு உபதேசித்தவர். அளப்பரிது - அளப்பரிய பொருள். சோதிப் பிழம்பு. மிக - மிகுதியாக. பால் வெண்ணீற்றினர் - பால்போலும் வெள்ளிய திருவெண்ணீறணிந்தவர். |
|