|
பாடல் எண் :1356 | தவள மாமதிச் சாயலோர் சந்திரன் பிளவு சூடிய பிஞ்ஞக னெம்மிறை அளவு கண்டில ளாவடு தண்டுறைக் களவு கண்டன ளொத்தனள் கன்னியே. |
| 2 | பொ-ரை: இக்கன்னி, வெள்ளிய பெருமைமிகுந்து மதிக்கத்தக்க சாயலை உடைய சந்திரனின் பிளவாகிய பிறையினை சூடிய எம்மிறைவனாகிய பிஞ்ஞகனின் அன்பின் அளவை முற்றும் கண்டலளேனும், திருவாவடுதுறையிலே அவனைக் களவொழுக்கத்தாற் கண்டவளை ஒத்தாள் ஆயினள். கு-ரை: தவளம் - வெண்மை. மா - சிறந்த. மதிச்சாயலோர் சந்திரன் பிளவு - முழுமதியின் ஓர் சாயலைக்கொண்ட பிளவுச் சந்திரன் எனலுமாம். ஒருகலைப் பிறை என்றபடி. பிஞ்ஞகன் - தலைக்கோலம் அணிந்தவன். எம் இறை அளவுகண்டிலள் - எம் இறைவனது பெருமையின் அளவை அறிந்தாளில்லை. களவு கண்டனள் - களவொழுக்கத்தின் கண்ணே ஈடுபட்டாள். ஒத்தனள் - அவனோடு உள்ளத்தால் ஒரு தன்மையள் ஆயினாள். |
|