|
பாடல் எண் :1360 | குழலுங் கொன்றையுங் கூவிள மத்தமும் தழலுந் தையலோர் பாகமாத் தாங்கினான் அழக னாவடு தண்டுறை யாவெனக் கழலுங் கைவளை காரிகை யாளுக்கே. |
| 6 | பொ-ரை: இவ்வழகுடைய பெண், கொன்றை மலர்களும், கூவிளந்தளிர்களும், ஊமத்தமலர்களும் சூடிய சடையும், தையல் ஒரு பாகமும் கொண்ட ஆவடுதண்டுறைக்குரிய அழகனே என்று விரும்பி அழைத்தலால், கைவளைகள் கழலுகின்ற நிலைமையள் ஆயினள். கு-ரை: குழல் - சடைமுடி. கூவிளம் - வில்வம். கூவிளம் மத்தம், தழல் இவற்றைத் தாங்கினான் - தையல் - பார்வதி. ஓர் பாகமாத் தாங்கினான் - ஒரு பாகத்தே கொண்டான். கைவளை கழலும், உடல் இளைக்கும் நிறையழியும் என்றவாறு. |
|