|
பாடல் எண் :1367 | பட்ட நெற்றியர் பால்மதிக் கீற்றினர் நட்ட மாடுவர் நள்ளிரு ளேமமும் சிட்ட னார்தென்ப ராய்த்துறைச் செல்வனார் இட்ட மாயிருப் பாரை யறிவரே. |
| 3 | பொ-ரை: தென்பராய்த்துறை உறையும் அருட்செல்வர் பட்டமணிந்த நெற்றியினை உடையவர்; பாலனைய நிலவு சொரியும் மதிக்கீற்றினை உடையவர்; நள்ளிருளில் உலகிற்கு இன்பம் செய்யும் பொருட்டு நடனம் ஆடுபவர்; உயர்வுடையவர்; தம்மிடம் விருப்பமாயிருக்கும் அடியார்களைத் தாம் அறியும் இயல்பினர் ஆவர். கு-ரை: பட்ட நெற்றியர் - நெற்றியில் திருநீற்றுப்பட்ட மணிந்தவர். மதிக்கீறு - பிறை. நள்ளிருள் ஏமம் - இருள் செறிந்த இரவு எனலுமாம். யாமம் என்பதன் திரிபு ஏமம். சிட்டர் - சிரேஷ்டர். இட்டமாயிருப்பாரை - தன்மேல் விருப்பமாய் இருக்கும் அடியாரை. |
|