பாடல் எண் :1368
முன்பெ லாஞ்சில மோழைமை பேசுவர்
என்பெ லாம்பல பூண்டங் குழிதர்வர்
தென்ப ராய்த்துறை மேவிய செல்வனார்
அன்ப ராயிருப் பாரை யறிவரே.

4
பொ-ரை: தென்பராய்த்துறை உறையும் அருட்செல்வர், அறியாமையொடு கூடிய சில சொற்களைப் பலர் முன்னிலையிலும் பேசுவார். எலும்புகள் பலவற்றைப் பூண்டு திரிவார். தம்மீது அன்பராய் இருப்பாரை நன்கு அறியும் இயல்பினர்.
கு-ரை: முன்பெலாம் - பலர் முன்னிலையிலும். மோழைமை - அறியாமையொடு கூடிய சொற்கள். உழிதர்வர் - திரிவர். அறிவர் - தெரிந்து திருவருள் பாலிப்பர்.