பாடல் எண் :1375
அரக்க னாற்ற லழித்த அழகனைப்
பரக்கு நீர்ப்பொன்னி மன்னு பராய்த்துறை
இருக்கை மேவிய ஈசனை யேத்துமின்
பொருக்க நும்வினை போயறுங் காண்மினே.

11
பொ-ரை: இராவணனது ஆற்றலை அழித்த அழகனும், நீர் பரக்கின்ற பொன்னி மன்னுகின்ற பராய்த்துறையில் இருக்கை பொருந்திய ஈசனுமாகிய பெருமானை ஏத்துவீர்களாக! நும்வினைகள் விரைந்து போய்த் தொலையும்; காண்பீர்களாக.
கு-ரை: ஆற்றல் - வலிமை. பரக்கும் - எங்கும் பரவும். இருக்கை - இருப்பிடம். பொருக்க - விரைந்து.