|
பாடல் எண் :1388 | மாதி னைமதித் தானொரு பாகமாக் காத லாற்கரந் தான்சடைக் கங்கையைப் பூத நாயகன் பூந்துருத் திந்நகர்க் காதி சேவடிக் கீழ்நா மிருப்பதே. |
| 3 | பொ-ரை: உமையம்மையை ஒரு பாகமாக மதித்து ஏற்றவனும், சடையின்கண் கங்கையைக் காதலால் ஒளித்துக் கொண்டவனும், பூதங்களுக்குத் தலைவனும், பூந்துருத்தி நகரில் எழுந்தருளியிருக்கும் முதல்வனும் ஆகிய பெருமான் சேவடிக்கீழ் நாமிருக்கப் பெற்றோம். கு-ரை: மாதினை - உமையை. ஒருபாகமா மதித்தான் - இடப்பாகத்தே ஏற்றுக்கொண்டவன். கங்கையைக் காதலால் சடைக் கரந்தான் என்க. காதலால் - உயிர்கள்மீது வைத்த அன்பால். கரந்தான் - மறைத்தவன் பூதநாயகன் - உயிர்களுக்குத் தலைவன். ஆதி - முதல்வன். |
|