பாடல் எண் :1390
செம்பொ னேயொக்கும் மேனியன் தேசத்தில்
உம்ப ராரவ ரோடங் கிருக்கிலும்
பொன்பொன் னார் செல்வப் பூந்துருத் திந்நகர்
நம்பன் சேவடிக் கீழ்நா மிருப்பதே.

5
பொ-ரை: நம் தேசத்தில் இருப்பினும் உம்பர் உள்ள தேவருலகத்தவரோடு இருப்பினும், பொன்னும் பொலிவார்ந்த செல்வமும் உள்ள பூந்துருத்தி நகரத்து நம்மவனாகவும், செம்பொன்னையே யொத்த திருமேனியினனாகவும் வீற்றிருக்கும் பெருமான் சேவடிக்கீழ் நாமிருக்கப் பெற்றோம்.
கு-ரை: செம்பொன் - சிவந்த பொன். உம்பரானவர் - தேவர்கள். பொன்பொன் - அழகிய பொன். ஆர் - பொருந்திய.