|
பாடல் எண் :1404 | அல்லி யானர வைந்தலை நாகணைப் பள்ளி யானறி யாத பரிசெலாம் சொல்லி நீயென்றுஞ் சோற்றுத் துறையர்க்கே புல்லி நீபணி செய்மட நெஞ்சமே. |
| 9 | பொ-ரை: அறியாமையை உடைய நெஞ்சமே! தாமரையின் அகவிதழில் வீற்றிருக்கும் பிரமனும், ஆதிசேடனாகிய படுக்கையை உடையவனாகிய திருமாலும் அறிய முயன்றும் அறிய இயலாத தன்மையெல்லாம் சொல்லி, சோற்றுத்துறையர்க்கே நீ என்றும் பொருந்திப் பணிசெய்வாயாக. கு-ரை: அல்லியான் - வெண்டாமரை மலரின் அகவிதழ்களில் எழுந்தருளியிருப்பவனாய பிரமன். நாகணைப்பள்ளி - பாம்பினை அணையாகவும் பள்ளியாகவும் கொண்ட திருமால். புல்லி - கலந்து. |
|