|
பாடல் எண் :1410 | விண்ட வர்புர மூன்றும்வெண் ணீறெழக் கண்ட வன்கடி தாகிய் நஞ்சினை உண்ட வன்னொளி யானநெய்த் தானனைத் தொண்ட ராய்த்தொழு வார்சுடர் வாணரே. |
| 4 | பொ-ரை: பகைவர் புரமூன்றையும் வெள்ளிய சாம்பலாகியெழுமாறு கண்டு எரித்தவனும், கடிதாகிய ஆலகாலத்தை உண்ட வனும் ஆகிய ஒளியானிருநெய்த்தானனைத் தொண்டராகித் தொழுவார் ஒளியோடு கூடி வாழ்பவராவர். கு-ரை: விண்டவர் - பகைவர். வெண்ணீறெழக் கண்டவன் - சாம்பராகச் செய்தவன். கடிது - கொடியது. |
|