|
பாடல் எண் :1417 | அருவ னாய்அத்தி யீருரி போர்த்துமை உருவ னாயொற்றி யூர்பதி யாகிலும் பருவ ரால்வயல் சூழ்ந்த பழனத்தான் திருவி னாற்றிரு வேண்டுமித் தேவர்க்கே. |
| 1 | பொ-ரை: அருவத் திருமேனியுடையவனாய் யானையின் ஈரப்பட்ட உரியைப் போர்த்தவனாய். உமையை ஒரு பாகத்தில் உடையவனாய் ஒற்றியூரைத் தன்பதியாக் கொண்டவன் ஆயினும், பருத்த வரால் மீன்கள் நிறைந்த வயல்கள் சூழ்ந்த பழனம் என்னும் தலத்தினுள்ளான் அருட்செல்வத்தினால் இத்தேவர்களுக்குச் செல்வம் பெருகுதலை விரும்பும். கு-ரை: அருவன் - உருவமற்றவன். அத்தி - யானை. உமை உருவன் - பார்வதியோடு கூடிய உருவமுடையவன். பதி - வாழும் ஊர். பருவரால் - பெரியவரால் மீன்கள் பொருந்திய. பழனத்தான் - திருப்பழனம் என்னும் தலத்திற்குரியவன். திருவினால் திருவேண்டும் - செல்வங்களைக்கொண்டு சிவப்பணி செய்து வீடு பேற்றைக் கேளுங்கள். இத் தேவர்க்கே - இத்தேவரிடத்தே. |
|