|
பாடல் எண் :1419 | வண்ண மாக முறுக்கிய வாசிகை திண்ண மாகத் திருச்சடைச் சேர்த்தியே பண்ணு மாகவே பாடும் பழனத்தான் எண்ணும் நீர் அவ னாயிர நாமமே. |
| 3 | பொ-ரை: அழகுபெற முறுக்கப்பெற்ற வட்டமாகிய திருச்சடையிற் சேர்த்து உறுதியாகக் கட்டி முடித்துப் பண் பாடும் இறைவனாகிய பழனத்தலத்துப் பெருமானின் ஆயிரம்நாமங்களை நீர் எண்ணுவீராக. கு-ரை: வண்ணமாக முறுக்கிய - அழகாக முறுக்கிக் கட்டிய. வாசிகை - தலை. திண்ணமாக - பெரிதாக. பண்ணுமாகவே பாடும் - இசையிலக்கணக்கூறு தெரியப் பாடுகின்ற. அவன் ஆயிரம் நாமத்தை நீர் எண்ணும் - அவனது பல திருப்பெயர்களை நீங்கள் நினையுங்கள். |
|