|
பாடல் எண் :1423 | மார்க்க மொன்றறி யார்மதி யில்லிகள் பூக்க ரத்திற் புரிகிலர் மூடர்கள் பார்க்க நின்று பரவும் பழனத்தான் தாட்க ணின்று தலைவணங் கார்களே. |
| 7 | பொ-ரை: எல்லோரும் பார்க்க நின்று பழனத்தின்கண் பரவுவார்க்கு அருள் வழங்கும் இறைவனின் திருவடிக்கண் நின்று தலைவணங்காதவர்கள், அறிவிலிகளாகி வழியொன்றறியாதவர்களும், பூக்களைக்கொண்டு கரத்தால் தொழ விழையாத மூடர்களும் ஆவர். கு-ரை: மார்க்கம் - உண்மைச் சமயநெறி. மதியில்லிகள் - மதியிலிகள். பூக்கரத்தில் புரிகிலர் - பூக்களைக் கையில்கொண்டு போற்றாதவர். பார்க்க - அவனது திருக்கண் நோக்கு விழ. பரவும் - தோத்திரியுங்கள். தாள்கள் - திருவடிகள். தலை வணங்காரை நோக்கி இரங்கியது. |
|