பாடல் எண் :1426
பொங்கு மாகடல் சூழிலங் கைக்கிறை
அங்க மான இறுத்தருள் செய்தவன்
பங்க னென்றும் பழன னுமையொடும்
தங்கன் தாளடி யேனுடை யுச்சியே.

10
பொ-ரை: பழனத்தலத்து இறைவன், பொங்குகின்ற பெருங் கடல் சூழ்ந்த இலங்கைக்கரசனாம் இராவணனது அங்க மானவற்றை இறுத்து அருள்செய்தவனும், உமையொருபங்கனும், அடியேனுடைய உச்சியிலே தன் தாளிணைகளைத் தங்குமாறு செய்தவனும் ஆவான்.
கு-ரை: பொங்கும் - அலையெழுப்பும். மா - பெரிய. அங்கமான - உடலுறுப்புக்களானவை. பங்கன் - மாதொரு கூறன். தங்கன் - தங்கியிருப்பவன். என்றும் - எப்பொழுதும்.