|
பாடல் எண் :1427 | கான றாத கடிபொழில் வண்டினம் தேன றாத திருச்செம்பொன் பள்ளியான் ஊட றாததோர் வெண்டலை யிற்பலி தான றாததோர் கொள்கையன் காண்மினே. |
| 1 | பொ-ரை: மணம் நீங்காத விளக்கம் உடைய பொழில்களில் வண்டினங்களின் தேன் நீங்காத திருச்செம்பொன் பள்ளி இறைவன், தசைவிட்டு நீங்காத ஒரு வெண்தலையில் பலியினைத் தான் ஏற்றலினின்றும் நீங்காத இயல்புடையவன்; காண்பீர்களாக. கு-ரை: கான் - மணம். அறாத - நீங்காத. கடி - விளக்கம். வண்டினம் - வண்டுக்கூட்டங்கள். தேன் அறாத - தேனை இழக்காத. ஊன் அறாததொர் வெண்டலை - தசை நீங்காததொரு வெள்ளிய மண்டையோடு. பலிதானறாததோர் கொள்கையன் - பிச்சையெடுக்கும் தொழில் நீங்காத தன்மையன். |
|