|
பாடல் எண் :1430 | அருவ ராததோர் வெண்டலை யேந்திவந் திருவ ராயிடு வார்கடை தேடுவார் தெருவெ லாமுழல் வார்செம்பொன் பள்ளியார் ஒருவர் தாம்பல பேருளர் காண்மினே. |
| 4 | பொ-ரை: அருவருப்புக்கொள்ளாது ஒரு வெண்டலையை ஏந்திவந்து தெருவெல்லாம் உழல்வார் செம்பொன் பள்ளி இறைவர்; திருமாலும் பிரமனுமாகிய இருவரால் திருமுடி, திருவடிகளின் எல்லை தேடப்பட்ட அவ்வொருவர் பலபெயர்களும் கொண்டு திகழ்வர்; காண்பீர்களாக. கு-ரை: அருவராததொர் -வெறுக்கத்தக்கதல்லாத ஒரு. இருவராய-அருளுடன் சத்தியும் சிவமுமாய். இடுவார்-வந்து பிச்சையிடுவார். கடை-வீட்டுவாயில். உழல்வார் - திரிந்து வருந்துவார். ஒருவர் தாம் பலபேருளர்-தாமொரு பொருளேயானவர் ஆயினும் பல திருப்பெயர்களை உடையவர். ஆவணத்தைப் பலியாக இடுதல் உட்பொருள் "பசுபோதக் கவளமிட" (திருவிளையாடல்-கடவுள் வாழ்த்து 15). |
|