பாடல் எண் :1432
சலவ ராயொரு பாம்பொடு தண்மதிக்
கலவ ராவதின் காரண மென்கொலோ
திலக நீண்முடி யார்செம்பொன் பள்ளியார்
குலவில் லாலெயில் மூன்றெய்த கூத்தரே.

6
பொ-ரை: பெருமைக்குரிய வில்லால் மூன்றெயில்களை எய்த கூத்தரும் , பொட்டணிந்தவரும், நீண்ட சடாமுடி உடையவருமாகிய செம்பொன்பள்ளி இறைவர் கங்கையைச் சூடியவராய், பாம்பும் குளிர்பிறையும் கலந்தவராய் ஆவதன் காரணம் என்னையோ?.
கு-ரை: சலவராய் - கங்கையைச் சூடியவராய். கலவராவதின் காரணம் - கலந்தணிபவராதற்குக் காரணம். நெற்றிப் பொட்டும் நீர்முடியும் அணிந்தவர். குலம் - உயர்ந்த.