|
பாடல் எண் :1437 | மலைக்கொ ளானை மயக்கிய வல்வினை நிலைக்கொ ளானை நினைப்புறு நெஞ்சமே கொலைக்கை யானையுங் கொன்றிடு மாதலால் கலைக்கை யானைகண் டீர்கட வூரரே. |
| 1 | பொ-ரை: திருக்கடவூரில் மேவும் பெருமான், மலையில் வாழும் யானை போன்று மயக்கம் செய்த கொடிய வினைகளுக்கே நிலைக்களமாய் யானைபோன்று அடங்காது பலவற்றையும் நினைக்கின்ற நல்வினைகளாகிய யானைகளையும் ஏனைய மதயானையையும் அழிக்கும் இயல்பினர் கலையின் பயனாகிய ஒழுக்கத்தால் அடையத்தகும் யானை போன்றவர். கு-ரை: மலைக்கொள் யானை மயக்கிய வல்வினை - மலையில் வாழும் யானை போன்று மயக்கத்தைச் செய்த கொடிய வினைகள். வல் வினை நிலைக்கொளானை - கொடிய வினைகளுக்கே நிலைக்களமாய் யானை போன்று அடங்காது பலவற்றை. நினைப்புறும்- நினைக்கின்ற. கொலைக்கை யானையும் - வல்வினையாகிய யானையையும் ஏனை மத யானையையும். கலைக்கையானை - கல்வியறிவினாலாகிய ஒழுக்கத்தின் பயனாக அடையத்தக்க பொருள்களாயுள்ளவர். |
|