பாடல் எண் :1447
அடுத்து வந்த இலங்கையர் மன்னனை
எடுத்த தோள்க ளிறநெரித் தானையார்
கடுத்த காலனைக் காய்ந்ததொ ரானையார்
கடுக்கை யானைகண் டீர்கட வூரரே.

11
பொ-ரை: எடுப்பேன் என்று அடுத்துவந்த இலங்கைவேந்தனை எடுக்கலுற்ற இருபது தோள்களும் இறும் வண்ணம் நெரித்த ஆனையார்; சினந்த காலனைக் காய்ந்த ஆனையார்; கடவூர்த் தலத்து இறைவர் கொன்றையணிந்த ஆனைபோல்வர்; காண்பீர்களாக.
கு-ரை: அடுத்துவந்த - கயிலையை தெருங்கிவந்த கடுத்த - சினந்துவந்த கடுக்கை - கொன்றை.