|
பாடல் எண் :1452 | கத்து காளி கதந்தணி வித்தவர் மத்தர் தாங்கட வூரின் மயானத்தார் ஒத்தொவ் வாதன செய்துழல் வாரொரு பித்தர் காணும் பெருமா னடிகளே. |
| 5 | பொ-ரை: கடவூர் மயானத்தாராகிய பெருமான் அடிகள் கத்துகின்ற காளியின் சினத்தைத் தணிவித்தவர்; மதம் பொருந்தியவர் (ஊமத்தமலரைச் சூடியவர்) ஒத்தும் ஒவ்வாதும் செய்யும் செயல் பலவற்றைச் செய்து உழல்கின்ற பித்தர்போல்வர்; காண்பீர்களாக. கு-ரை: கத்து - ஆரவாரம் செய்த. கதம் - கோபம். தணிவித்தவர் - நீக்கியவர்; நடனத்தால் வென்றவர். மத்தர் - உன்மத்தர், அல்லது ஊமத்தை அணிந்தவர். ஒத்தொவ்வாதன செய்யும் - உலகியலோடு பொருத்தமுள்ளனவாகவும், பொருத்தமில்லாதனவாகவும் செய்யும். பித்தர் - ஒருநெறிப்பட்ட செயல் இல்லாதவர். |
|