பாடல் எண் :1454
அணங்கு பாகத்தர் ஆரண நான்மறை
கணங்கள் சேர்கட வூரின் மயானத்தார்
வணங்கு வாரிடர் தீர்ப்பர் மயக்குறும்
பிணங்கொள் காடர் பெருமா னடிகளே.

7
பொ-ரை: கடவூர் மயானத்தாராகிய பெருமான் அடிகள், உமை ஒருபாகம் உடையவர்; ஆரணங்களாகிய நான் மறைகளின் தொகுதிகள் தொழுது சேரும் தகைமை உடையவர்; தம்மை வணங்குவார்களது துன்பங்களைத் தீர்ப்பவர்; மயக்கம் மிகுவிக்கும் பிணங்களைக் கொண்ட சுடுகாடே பெரும்பதியாக் கொண்டவர்.
கு-ரை: அணங்கு - பார்வதி. ஆரண நான்மறை - (இருபெயரொட்டு) வேதங்களாகிய நான்மறை. கணங்கள் - அடியவர் கூட்டம், மயக்குறும் - அறிவாற்றல் ஒடுங்கிய. பிணங்கொள்காடு - இடுகாடு. எல்லா உலகங்களும் அழிந்து உயிர்கள் மயங்கித் தம்முள் ஒடுங்கும் இடம் பிணங்கொள் காடு எனப்பட்டது.