|
பாடல் எண் :1460 | குறைவி லோங்கொடு மாநுட வாழ்க்கையால் கறைநி லாவிய கண்டனெண் தோளினன் மறைவ லான்மயி லாடு துறையுறை இறைவன் நீள்கழ லேத்தி யிருக்கிலே. |
| 5 | பொ-ரை: திருநீலகண்டனும், எட்டுத் தோளினனும், வேதம் வல்லவனுமாகிய மயிலாடுதுறை உறையும் இறைவன் நீண்ட கழல்களை ஏத்தி இருந்தால், கொடிய மானிட வாழ்க்கையால் வருகின்ற குறைவு சிறிதும் இல்லாதவராவோம். கு-ரை: கொடு - தீய. மீண்டும் மீண்டும் பிறவிக்கேதுவாய வினை தேடலால் தீயது என்றார். நீள் கழல் - அழிவில்லாத திருவடிகளை; ஏத்தியிருக்கும் பிறவி வாய்க்குமானால் அம்மானுட வாழ்க்கையால் வினை தேடுதலாகிய குறையிலை என்க. |
|