பாடல் எண் :1471
கருத்த னைக்கழிப் பாலையுள் மேவிய
ஒருத்த னைஉமை யாளொரு பங்கனை
அருத்தி யாற்சென்று கண்டிட வேண்டுமென்
றொருத்தி யாருள மூசல தாடுமே.

5
பொ-ரை: ஒருத்தியின் உள்ளம், கருத்தின்கண் இருப்பவனும், கழிப்பாலையுள் எழுந்தருளியிருக்கும் ஒப்பற்றவனும், உமையாளை ஒருபங்கில் உடையவனும் ஆகிய பெருமானை விருப்பத்தாற்சென்று கண்டிடவேண்டும் என்று ஊசலாடுகிறது.
கு-ரை: கருத்தனை - தலைவனை. அருத்தி - மிக்கிவிருப்பம். ஒருத்தி - ஒரு பெண். ஆர் உள்ளம் - நிறைந்த உள்ளம். ஊசலாடும் - அலையும்; மனம் தலைவனைக்காண முன்னே இழுக்கவும் பிறர் காணில் நகைப்பர் என்னும் நாணம் பின்னே இழுக்கவும் தடுமாறுதல்.