|
பாடல் எண் :1472 | கங்கை யைச்சடை வைத்து மலைமகள் நங்கை யையுட னேவைத்த நாதனார் திங்கள் சூடித் திருக்கழிப் பாலையான் இங்கு வந்திடு மென்றிறு மாக்குமே. |
| 6 | பொ-ரை: இப்பெண், சடையிற் கங்கையை வைத்து மலைமகளாகிய நங்கையைத் தன்னொரு பங்கில் வைத்த இறைவனாகிய திருக்கழிப்பாலைப் பெருமான் இளம்பிறை சூடி இங்குத் திருவுலாப்போதற்கு எழுந்தருள்வான் என்று இறுமாப்பு அடைகின்றாள். கு-ரை: மலைமகள் நங்கை - பார்வதி. இங்குவந்திடும் - என்னைத்தேடி இங்கே ஆசையோடு வருவான் என்று சொல்லிப் பெருமையடைவாள். இருவரையும் கொண்டவர் என்னையும் கொள்வர் என்பது குறிப்பு. |
|