பாடல் எண் :1491
கட்டப் பட்டுக் கவலையில் வீழாதே
பாட்ட வல்லுயிர் போவதன் முன்னம்நீர்
சிட்ட னார்திரு வேட்களங் கைதொழப்
பட்ட வல்வினை யாயின் பாறுமே.

6
பொ-ரை: கவலைகளாற் கட்டப்பெற்று வீழ்ந்திடாது, விரைந்து உயிர்போவதற்கு முன்பே நீர், உயர்ந்த இறைவர் எழுந்தருளியுள்ள திருவேட்களம் கைதொழுவீர்களாக; தொழுவீராயின், பொருந்திய வல்வினைகள் அனைத்தும் கெடும்.
கு-ரை: கட்டப்பட்டு - துன்புற்று. கவலையில் - மனக்கவலையின்கண். பொட்ட - விரைவாக (பொட்டென என்பதன் திரிபு). வல்உயிர் - பலவும் செய்யவல்ல உயிர். பட்ட - செய்யப்பட்டுத் தோன்றிய. பாறும் - அழியும்.