பாடல் எண் :1492
எட்டு மொன்று மிரண்டுமூன் றாயினார்
சிட்டர் சேர்திரு வேட்களங் கைதொழு
திட்ட மாகி யிருமட நெஞ்சமே.

7
பொ-ரை: அறியாமை உடைய நெஞ்சமே! வட்ட வடிவாகிய மென்முலைகளை உடைய உமாதேவியை ஒருபங்கில் உடையவரும், எட்டு மூர்த்தியானவரும், ஒரு பரம்பொருளானவரும், இரண்டு (சிவம், சத்தி) ஆனவரும், மும்மூர்த்தியானவரும் உறைகின்ற சிறப்புடையதும், உயர்ந்தவர்கள் சேர்ந்ததுமான திருவேட்களம் கைதொழுது விருப்புற்று இருப்பாயாக.
கு-ரை: வட்டம் - வட்டவடவமான. எட்டாயினார் - அட்டமூர்த்தி வடிவாயினவர். (தி.6.ப.94.பா.1.) ஒன்றாயினார் - ஒருவராயிருப்பவர். இரண்டாயினார் - சத்தி சிவமாய் வீற்றிருப்பவர். மூன்றாயினார் - படைப்பு முதலிய முத்தொழிலால் அயன், அரி, அரனாய் விளங்குபவர். சிட்டர் - உயர்ந்தோர். இட்டம் - விருப்பம். மடநெஞ்சமே - அறியாமை உடைய மனமே.