பாடல் எண் :1494
வட்ட மாமதில் மூன்றுடை வல்லரண்
சுட்ட கொள்கைய ராயினுஞ் சூழ்ந்தவர்
குட்ட வல்வினை தீர்த்துக் குளிர்விக்கும்
சிட்டர் பொற்றிரு வேட்களச் செல்வரே.

9
பொ-ரை: திருவேட்களத்து அருட்செல்வர் வட்டமாக வளைந்த மதில்கள் சூழ்ந்த திரிபுரங்கள் மூன்றையும் சுட்ட கொள்கையர் ஆயினும், தம்மைச் சூழ்ந்தவர் வல்வினைகளைத் தீர்த்து அவர்களைக் குளிர்விக்கும் சிட்டராவர்.
கு-ரை: வட்டம் - வட்டவடிவாய். மதில் மூன்று அரண் - மூன்று மதில்களை உடைய வலிய கோட்டை. சுட்ட - அழித்த. சூழ்ந்தவர் - தம்மை வலம் வந்து வணங்கி நிற்பவர். குட்டவல்வினை - குழியாகிய வலியவினைகள்.