|
பாடல் எண் :1495 | சேட னாருறை யுஞ்செழு மாமலை ஓடி ஆங்கெடுத் தான்முடி பத்திற வாட வூன்றி மலரடி வாங்கிய வேட னாருறை வேட்களஞ் சேர்மினே. |
| 10 | பொ-ரை: பெருமை உடையனாய பெருமான் உறையும் திருமாமலையாகிய திருக்கயிலாயத்தை ஓடி எடுத்தவனாகிய இராவணன் முடிகள் பத்தும் இறும்படியாக வாட ஊன்றி, மலரடியினை வளைத்த வேடனார் உறைகின்ற திருவேட்களம் சேர்வீராக. கு-ரை: சேடன் - பெருமையுடையவன். வாட - வருந்த. ஊன்றிவாங்கி - சிறிது ஊன்றிப் பின்னர் எடுத்த. வேடனார் - பார்த்தற்குப் பாசுபதம் கொடுத்த தலமாதலின் அருச்சுனனை எதிர்க்க வேடனாய் வந்தவன் என்றார்; வேடனார் பலகோலங்களைக் கொண்டவர் எனலுமாம். |
|