பாடல் எண் :1497
பொக்கம் பேசிப் பொழுது கழியாதே.
துக்கந் தீர்வகை சொல்லுவன் கேண்மினோ
தக்கன் வேள்வி தகர்த்த தழல்வண்ணன்
நக்கன் சேர்நல்லம் நண்ணுதல் நன்மையே.

2
பொ-ரை: பொய்ம்மொழிகளைப் பேசிப் பொழுது கழியாமல் துயரங்கள் தீர்தற்கு ஓர் உபாயம் சொல்லுவேன்; கேட்பீராக; தக்கன் வேள்வியைத் தகர்த்த தீவண்ணனாகிய திகம்பரன் உறைகின்ற திருநல்லம் நண்ணி வழிபடுதலே உமக்கு நன்மை.
கு-ரை: பொக்கம் - பொய்; உலகியலைப் பற்றியன. தீர்வகை - தீரும்வழி. தகர்த்த - அழித்த. நண்ணுதல் - அடைதல். நக்கன் - நிர்வாண கோலத்தினன்.