|
பாடல் எண் :1499 | தமக்கு நல்லது தம்முயிர் போயினால் இமைக்கும் போது மிராதிக் குரம்பைதான் உமைக்கு நல்லவன் தானுறை யும்பதி நமக்கு நல்லது நல்ல மடைவதே. |
| 4 | பொ-ரை: தம்முயிர் தம்மைவிட்டு நீங்கினால் தமக்கு நல்லது; அங்ஙனமே இவ்வுடலாகிய குடிசை இமைப்பொழுது கூட நில்லா இயல்புடையது; உமாதேவிக்கு நல்லவனாகிய இறைவன் உறைகின்ற பதியாகிய திருநல்லம் என்னுந் தலத்தை அடைந்து வழிபடுவதே நமக்கு நல்லது ஆகும். கு-ரை: தமக்கும் நல்லதாகிய (இனிதாகிய) உயிர்தாம் - மக்களை. இமைக்கும்போது - கண்ணிமைக்கும் நேரத்திற்குள். இராது - நில்லாதாய் அழியும். குரம்பை - உயிரின் வீடாகிய உடம்பு. உமைக்கு - பார்வதிக்கு. நல்லன் - நல்லவன். பதி நல்லமடைவது நமக்கு நல்லது. |
|