|
பாடல் எண் :1507 | சந்தி யானைச் சமாதிசெய் வார்தங்கள் புந்தி யானைப்புத் தேளிர் தொழப்படும் அந்தி யானை ஆமாத்தூ ரழகனைச் சிந்தி யாதவர் தீவினை யாளரே. |
| 2 | பொ-ரை: காலை மாலை ஆகிய சந்திகளில் வணங்கப் படுவானும், யோகநெறி தலைப்படுவாருடைய புந்தியில் உறைபவனும், தேவர்களால் தொழப்படும் அந்திவானத்தைப்போன்ற செம்மேனியானும் ஆகிய ஆமாத்தூர் அழகனைச் சிந்திக்காதவர்கள் தீவினையாளரே ஆவர். கு-ரை: சந்தியானை - மூன்று சந்தியாகாலங்களிலும் தியானிக்கப் படுகிறவனை. சமாதி - யோகநிஷ்டை; அழுந்தியறிதல். புந்தி - மனம். புத்தேளிர் - தேவர். அந்தியானை - அந்தி வண்ணனை; அல்லது அழகிய தீயின் உருவினன் என்க. அழகன் - தலத்து இறைவன் பெயர். |
|